ஆந்திராவில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 62 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், ஆந்திராவில் ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2514 ஆக உள்ளது. மேலும் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒருவர் பலியானது தெரிய வந்தது.


latest tamil news



மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 18 பேர் (நெல்லூரில் 14 பேர் மற்றும் சித்தூரில் 4 பேர் ) சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. நோய் தொற்றில் இருந்து இதுவரை 1731 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X