சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

முதல்வரை மாற்றலாமா?

Added : மே 22, 2020
Share
Advertisement
 முதல்வரை மாற்றலாமா?

முதல்வரை மாற்றலாமா?

'முதல்வர் பதவியில் அமர்வதற்கு, ரொம்பவே அவசரப்பட்டு விட்டோம். கொஞ்சம் தாமதித்திருந்தால், பெரிய பிரச்னையில் இருந்து தப்பித்திருக்கலாம்' என, தீவிரமாக யோசித்து வருகிறார், மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான். மத்திய பிரதேசத்தில், கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், குறைந்த அளவு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் கமல்நாத் முதல்வரானார். காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரை தங்கள் பக்கம் இழுத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, கமல்நாத் அரசை கவிழ்த்தது, பா.ஜ., மேலிடம்.
பா.ஜ., வின் சிவ்ராஜ் சிங் சவுகான், மீண்டும் முதல்வரானார். அவர் பதவியில் அமர்ந்த அடுத்த நாளே, கொரோனா பிரச்னை விஸ்ரூபம் எடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார் சவுகான். பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கலெக்டர்கள், அதிகாரிகளை அதிரடியாக மாற்றி வருகிறார்.
'ம.பி.,யில் கொரோனா அதிகம் பரவியதற்கு, முந்தைய காங்., அரசு, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது தான் காரணம்' எனக் கூறினார்; அவரது குற்றச்சாட்டு எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியினரோ, 'அதிகாரிகளை மாற்றுவதற்கு பதிலாக, முதல்வரை மாற்றினால், ஏதாவது பலன் கிடைத்தாலும் கிடைக்கலாம்' என,
கிண்டலடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X