சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அந்தப் பிரிவினருக்கு, உங்கள் கட்சி மரியாதை கொடுப்பதாக இருந்திருந்தால், அ.தி.மு.க.,வுக்கு அல்லவா, துரைசாமி வந்திருக்க வேண்டும்...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தி.மு.க.,வில், ஆதி திராவிடர், அருந்ததியின மக்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அதன் வெளிப்பாடாக தான், துரைசாமி வெளியேறி உள்ளார்; இன்னும் பலர் வெளியேறுவர்.

'இந்தக் குரல், தமிழகத்தில் மட்டும் தான் ஒலிக்கிறது; பிற மாநிலங்களில் அதிகம் ஒலிப்பதில்லையே ஏன்...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார் அறிக்கை: இலவச மின்சார சலுகைகளை ரத்து செய்யும், சட்ட திருத்த மசோதா ஏற்புடையதல்ல. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், மாநில அரசுகளின் உரிமைகளை நீர்த்து போகச் செய்யும், மின்சார சட்ட திருத்த வரைவு மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.'இதை கண்காணிப்பது, அரசின் வேலையல்ல; பெற்றவர்கள் என்ன செய்கின்றனர்; பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தெரியாதவர்கள் தான், இதற்கு பொறுப்பு...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா அறிக்கை:
வருங்கால இந்தியாவை உருவாக்கக் கூடிய, மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தை, 'பப்ஜி' போன்ற ஆன்லைன் விளையாட்டால், இழந்து வருவது, வேதனை அளிக்கிறது. எனவே, பப்ஜி உள்ளிட்ட, ஆன்லைன் விளையாட்டுகளை, தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.'ஸ்டெர்லைட் ஆலையின், 3,000 ஊழியர்கள், அதை நம்பியிருந்த, 8,000 பேர் வேலையிழந்தது பற்றியும் கவலைப்பட மாட்டீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
துாத்துக்குடியில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இன்னும் நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உடனே நீதி கிடைக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.'நல்ல யோசனை தான்; தமிழக அரசு கவனிக்க வேண்டும்...' என, ஆதரவு குரல் எழுப்பும் வகையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கொரோனா பயத்தில் இருந்து மக்களுக்கு நிச்சயம், ஆன்மிக வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். எனவே, கிராமப்புற கோவில்களையும், கூட்டம் வராத, நகர்ப்புற கோவில்களையும் உடனே திறக்கலாம். பெரிய கோவில்களில், சமூக இடைவெளியை பின்பற்றி திறக்கலாம்.'ஆண்டுகள் கடந்ததால், பழைய சம்பவங்கள் மறந்திருக்க வாய்ப்பு உள்ளது; நீங்கள் நினைவுபடுத்துகிறீர்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர், வைகைச்செல்வன் அறிக்கை:
துாத்துக்குடியை பற்றி பேசும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, அண்ணாமலை பல்கலை மாணவர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு; மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவில்லையா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X