சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

புரோக்கர்கள் பிடியில் போலீஸ் ஸ்டேஷன்!

Added : மே 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 புரோக்கர்கள் பிடியில் போலீஸ் ஸ்டேஷன்!

புரோக்கர்கள் பிடியில் போலீஸ் ஸ்டேஷன்!

''அமைச்சர் பெயர்ல பணம் கேட்டு மிரட்டுறாங்க பா...'' என, குப்பண்ணா வீட்டு திண்ணையில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''கூட்டுறவு துறையில, மாவட்டங்கள்ல இருக்கிற இணை பதிவாளர்களை, அமைச்சரின் அரசியல் உதவியாளர்கள் பேசுறதா, சிலர் தொடர்பு கொள்றாங்க...
''அப்ப, 'நம்ம அமைச்சர் தொகுதியில, கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குறோம்... அதுக்கு, உங்க சார்புல, 2 லட்சம் ரூபாய் தரணும்'னு
கேட்கிறாங்க பா...
''அதே மாதிரி, கூட்டுறவு வங்கிகளை கண்காணிக்கும் இணை மற்றும் துணை பதிவாளர்களிடம், 'நீங்க, ௧ லட்சம் ரூபாய் தரணும்'னு கேட்கிறாங்க...''சில நேர்மையான அதிகாரிகள், 'நீங்க நிவாரணம் வழங்க, நாங்க ஏன் பணம் தரணும்'னு கேட்டு, போனை,
'கட்' பண்ணிட்டாங்க... அதோட, அமைச்சர் ராஜுவுக்கும், முதல்வருக்கும் புகாரும் அனுப்பிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கொரோனா தடுப்பு பணிக்கும், கமிஷன் கேட்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''எங்க ஓய் இந்தக் கூத்து...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ஊர் முழுக்க, கொரோனா தடுப்பு பணிகள் நடக்குதுல்ல...
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், மூன்றாவது மண்டலத்துல இருக்கிற ஒரு பெண் அதிகாரி, ஊராட்சிகளில் சுகாதார தடுப்பு பணிகள் செய்றதுக்கு, '10 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன்'னு கறார்
காட்டுறாங்க...''கமிஷன் தரலைன்னா, கையெழுத்து போடாம, ஊராட்சிச் செயலர்களை, பிடிவாதமா திருப்பி அனுப்பிடுறாங்க... இதனால, பல ஊராட்சிகள்ல, சுகாதாரப் பணிகளைச் செய்ய முடியாம, செயலர்கள் தவிக்கிறாங்க...''
என்றார், அந்தோணிசாமி.குப்பண்ணா
வீட்டிற்குள் இருந்து, 'அமைதிக்கு பெயர் தான் சாந்தி...' என சினிமா பாடல் ஒலிக்க, ''ரேடியோ வால்யூமை குறைங்கோ...'' என, குரல் கொடுத்த குப்பண்ணா, ''புரோக்கர்களை புடிச்சா தான் காரியம் ஆகும் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.
''எந்த ஊர் சங்கதி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு... ''இந்தப் பகுதி,
வெள்ளாறு கரையோரமா இருக்கறதால, செங்கல் சூளைக்கு மண் திருடுறது, திருட்டு மணல் எடுக்கறது, மது விற்பனைன்னு, பல குற்றங்கள் நடக்கறது ஓய்...
''இதைப் பத்தி எல்லாம், எஸ்.பி.,க்கு தெரிவிக்க வேண்டிய தனிப்பிரிவு ஏட்டு, 'கல்லா' கட்டுறதுல தான், கண்ணும், கருத்துமா இருக்கார்...
''அதுவும் இல்லாம, இந்த ஸ்டேஷன்ல எந்த காரியம் ஆகணும்னாலும், அதுக்குன்னு இருக்கற புரோக்கர்களைப் பிடிச்சாப் போதும்... ''அவா, காரியத்தைக் கச்சிதமா முடிச்சு, தட்சணையை வாங்கி, அதிகாரிகள் துவங்கி, போலீஸ்காரா வரைக்கும், பகிர்ந்து குடுத்துடுவா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
வாசலில் நிழலாட, ''வேங்கடகிருஷ்ணன் வாங்கோ... உங்களைப் பார்க்கறது, சாட்சாத் பெருமாளைப் பார்த்த மாதிரின்னா இருக்கு...'' என, நண்பரை குப்பண்ணா வரவேற்க, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-மே-202022:02:05 IST Report Abuse
Anantharaman Srinivasan மந்திரிகளே கட்டிங்லே தான் குறியாயிருக்கங்க. அதிகாரிகளிடம் எப்படி நேர்மையிருக்கும்.
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
23-மே-202007:06:27 IST Report Abuse
Aaaaa அதென்ன எல்லோரும் வில்லங்கமானவர்களாக இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X