சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 22, 2020
Share
Advertisement
  இதே நாளில் அன்று

மே 23, 1981

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில், 1899 செப்., 25ம் தேதி பிறந்தவர், நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்ததால், 4-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.ஆரிய கான சபாவில் இணைந்து, நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் வந்தார். பின், கதர்க்கடை துவங்கி, நஷ்டமடைந்தார். 'கடன்களை அடைக்கும் வரை, ஊர் திரும்ப மாட்டேன்' என, உறுதியேற்றார். மதுரைக்குச் சென்று, பல நாடகங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார். கடன்களை அடைத்த பிறகு, ஊர் திரும்பினார்.கடந்த, 1933ம் ஆண்டு முதல், படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தன் பெயரை, நாராயணகவி என மாற்றிக் கொண்டார். முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர், 'கவிராயர்' என்று அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். 1981 மே, 23ம் தேதி மரணமடைந்தார்.
உடுமலை நாராயணகவி காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X