ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு: | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு:

Updated : மே 24, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (4)
Share
ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் தலைவரும், 'நிடி ஆயோக்' அமைப்பின் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு, சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் மூலம், 14 - 29 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல் படுத்தப்படாமல் இருந்தால், நம் நாட்டில், 37 ஆயிரத்திலிருந்து, 78 ஆயிரம் பேர் வரை, வைரஸ் பாதிப்புக்கு பலியாகி இருப்பர். ஊரடங்கு காரணமாக, ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு ஆய்வுகள் மூலம், இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பும் அபாரமானது.
ஊரடங்கு காலத்தை வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்கு, சுகாதாரத் துறை முழுமையாக பயன்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், நாடு முழுதும், 3,234 பேர், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் விகிதம், மே, 19ம் தேதி, 3.13 சதவீதமாக இருந்தது. தற்போது, 3.02 சதவீதமாக குறைந்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், முழு வீச்சில் வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதுவரை, 27 லட்சத்து, 55 ஆயிரத்து, 714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X