பொது செய்தி

தமிழ்நாடு

வாசிப்புக்கு நடமாடும் நூலகம்: போட்டி தேர்வர்கள் கோரிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement

உடுமலை:வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் 'லாக் டவுன்' நாட்களை பயனுள்ளதாக மாற்றவும், தற்காலிக நடமாடும் நுாலகங்களை துவக்க கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த, மக்கள் கூடும் நுாலகம் உட்பட இடங்கள் மூடப்பட்டுள்ளன. நுாலகங்கள், பலரின் வாசிப்பு திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, புத்தகங்களை நேசிப்பவர்களின் முக்கிய இடமாகவும், அறிவை மேம்படுத்திக்கொள்ளும் மையமாகவும் விளங்குகின்றன. வாசிப்பை நேசித்து, அன்றாடம் நுாலகம் வரும் பலரும் இப்போது, வீடுகளில் முடங்கி, மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், குழந்தைகளுக்கு மொபைல்போனை வழங்குவதை தவிர்க்க நினைக்கும் பெற்றோருக்கும், ஆன்லைன் கதைகள் மட்டுமே இப்போது கை கொடுத்து வருகிறது. போட்டித்தேர்வர்களுக்கும் இந்நிலை பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கினால், காய்கறிகள் மற்றும் மளிகைபொருட்கள் உட்பட பலவும் வீடுதேடி வந்துகொண்டிருக்கும் நேரத்தில், பலரும் வாசிக்க நேசிக்கும் புத்தகங்களையும் வீடுதேடி கொண்டு வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என, வாசகர்கள் பலரும் விரும்புகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே, மலை கிராமங்கள் மற்றும் நுாலகம் இல்லாத பகுதிகளில், மக்களிடம் புத்தகங்களை கொண்டு செல்ல நடமாடும் நுாலக திட்டம் உள்ளது. ஆனால், மக்கள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, புத்தக வாசிப்பாளர்கள் பலரும் பயன்பெறும் வகையில், அனைத்து பகுதிகளிலும், நுாலகர்களின் உதவியோடு, தற்காலிக நுாலக திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X