பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீரை பெருக்க 'டிரென்ஜ்' பருவமழைக்கு முன் அமைக்கணும்

Added : மே 22, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதியில், பருவமழை துவங்கும் முன், நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க, 'டிரென்ஜ்' அமைக்க, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.ஆனைமலை ஒன்றியத்தில், தென்னை, வாழை, கோகோ, ஜாதிக்காய் என பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கோடை முடிந்து தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால், மழைக்கு முன்பு 'டிரென்ஜ்' அமைக்க வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் கூறியதாவது: கடந்தாண்டு மழைப்பொழிவு இருந்ததால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறுகளில் இன்னமும் நீர் வற்றாமல் உள்ளது.நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இருந்து, அதிகப்படியான மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு முன்பாக 'டிரென்ஜ்' அமைத்து நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த விவசாயிகள் திட்டமிட வேண்டும்.இரண்டு தென்னை மரங்களுக்கு இடையே நீளமாக, இரண்டு அடி ஆழம் மற்றும் மூன்று அடி அகலத்தில் குழிதோண்டி, கால்வாய் போன்று 'டிரென்ஜ்' அமைக்கலாம்.இதில், மழைநீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்க உதவும். மேலும், குழியில் தென்னையின் மட்டை, ஓலை உள்ளிட்ட கழிவுகளை கொட்டலாம். கழிவுகள் மண்ணில் ஈரப்பதத்தை காப்பதுடன், மக்கிப்போய் சிறந்த உரமாகும்.அதேபோல், தோப்பின் வரப்பை, இரண்டு அடி உயரத்தில் அமைத்து, மழைநீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X