பொது செய்தி

தமிழ்நாடு

களிமண்ணில் செழித்து வளரும் 'குடிவிளப்பி': கோடை உழவில் அகற்ற அறிவுறுத்தல்

Added : மே 22, 2020
Share
Advertisement

உடுமலை:மழைக்கு பிறகு, களிமண்ணில் செழித்து வளரும் களைச்செடிகளை அகற்றி, கோடை உழவு செய்ய வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், பரவலாக களிமண் சாகுபடி பரப்பு உள்ளது. பருத்தி, மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி, பீட்ரூட் போன்ற சாகுபடிகள் இப்பரப்பில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடைக்கு பிறகு, அடுத்த சாகுபடி துவங்கும் முன், மழை பெய்தால், களிமண் விளைநிலங்களில், பல்வேறு களைச்செடிகள் முளைத்து பரவுகின்றன.
பார்த்தீனியம் உட்பட செடிகளுக்கு மருந்து தெளித்தும், உழவு செய்தும், கட்டுப்படுத்துகின்றனர். இருப்பினும், பல்வேறு வகையான களைச்செடிகளால் பாதிப்பு ஏற்படுகிறறது.குறிப்பாக, 'குடிவிளப்பி' களைச்செடி, ஒவ்வொரு சீசனிலும், அதிகளவு பரவி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இச்செடியானது, கத்தரி வகையை சேர்ந்ததாகும்.இலைகளில் முட்கள் இருக்கும்; வேர் மண்ணில் ஆழமாக செல்லும். மழைக்கு பிறகு செழித்து வளர்ந்து மண்ணிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண்துறையினர் கூறியதாவது:இவ்வகை களைச்செடியானது மணல் கலந்த களிமண்ணில்மட்டுமே வளரும். மக்காச்சோளம் உட்பட சாகுபடிகளின் போது, இச்செடிகளின் விதை மண்ணில் புதைந்திருக்கும்.அறுவடைக்கு பிறகு அடுத்த சாகுபடி செய்யாத போது, மழை பெய்தால், இவ்விதைகள் முளைக்கும். செடிகளை உடனடியாக அகற்றி விட வேண்டும். பெரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.இருப்பினும், கத்தரி குடும்பத்தை சேர்ந்த, இவ்வகை களைச்செடியை உடனடியாக அகற்றி, கோடை உழவு செய்வதுஅவசியமாகும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X