பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை

Added : மே 22, 2020
Share
Advertisement

கமுதி:கமுதி அருகே கீழராமநதியை சேர்ந்த மூதாட்டி வீராயி 67. முப்பது ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர், குழந்தையும் இல்லாத நிலையில் உணவுக்காக தவித்துள்ளார்.

தன்னை போல் யாரும் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாகக்கூடாது என்று நினைத்தவர் 30 ஆண்டுகளாக இட்லி, டீ, வடை தலா 25 பைசாவுக்கு விற்க துவங்கினார். இந்நிலையில் 25, 50 பைசா செல்லாது என அறிவித்த பிறகு ஒரு ரூபாய்க்கு 7 ஆண்டுகளாக இட்லி, வடை, டீ விற்கிறார். காலையில் இட்லி விற்ற பின் வழக்கம் போல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு சென்று விடுகிறார்.

ஒரு நாளைக்கு 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யும் வீராயி, மறுநாள் விற்பனைக்காக மாலையில் வீடு திரும்பியதும் கடையில் அரிசி வாங்கி கை உரலில் அரிசி, உளுந்தை ஆட்டும் பணியில் ஈடுபடுகிறார். ஒரு ரூபாய்க்கு விற்பதால் கீழராமநதி, கிளாமரம், அம்மன்பட்டி, முத்துப்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, வடுகபட்டி, கோரைப்பள்ளம் கிராம மக்கள் இவரது வாடிக்கையாளர்கள்.

வீராயி கூறுகையில், ஒரு ரூபாய்க்கு இரு வகை சட்னி, சாம்பாருடன் இட்லி, வெண்ணீரில் சுத்தம் செய்யப்பட்ட கண்ணாடி டம்ளரில் டீ, இஞ்சி, மிளகு, கிராம்பு கலந்த வடைகளை விற்கிறேன். எனக்கு லாபம் தேவை இல்லை. மக்கள் வீட்டு சமையல் ருசியுடன், பசி தீர வேண்டும் என்பதே ஆசை, என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X