தாலுகா அலுவலகம் முன் மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகம் முன் மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : மே 22, 2020
Share
 தாலுகா அலுவலகம் முன் மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா அலுவலகம்முன் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், இந்த நடைமுறையை கைவிடக் கோரியும், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வடிவேல் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது, தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இதர மாநில தொழிலாளர்களுக்கு போதிய உணவும் சொந்த ஊருக்குத் திரும்ப போக்குவரத்தும் ஏற்பாடும் செய்து தரவேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X