பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய கடைவீதி வியாபாரிகள் அதிருப்தி

Added : மே 22, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதியில் கடைவீதி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் அதிருப்பதி அடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சில தளர்வுகளுடன் காலை 7:00 முதல் இரவு 7:00 மணிவரை கடைகளை திறக்க அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நல்ல நிலையில் இருந்து வந்த வியாபாரம் சிலநாட்களாக மளிகைக்கடைகளில் வியாபாரம் குறைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக வருமானம் இன்றி தவிக்கும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அக்னி நட்சத்திர வெயிலுக்கு பயந்து வெளியே வர தயங்குகின்றனர்.இது குறித்து நெய்வேலி தொழில் வர்த்தக சங்க தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது. பொதுமக்கள் மத்தியில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை வாய்ப்பை இழந்து வருவாய் குறைந்து உள்ளதால் மக்கள் கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாலை நேரத்தில் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் மத்தியில் அதிருப்பதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X