கனரக வாகனங்களால் இணைப்பு ரோடு சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனரக வாகனங்களால் இணைப்பு ரோடு சேதம்

Added : மே 22, 2020
Share

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதுார் - சிங்கையன்புதுார் வரையான ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்து பாதிக்கிறது.கிணத்துக்கடவு அடுத்த, வடபுதுாரில் இருந்து சிங்கையன்புதுார் கல்லுக்குழி வரை, இரண்டு கி.மீ., தொலைவுக்கு தார் ரோடு அமைக்கப்பட்டது. கிராம இணைப்பு ரோடு என்பதால், டெம்போ, கார் போன்ற வாகன போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால், இவ்வழியாக போர்வெல் லாரி, மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் பெரிய லாரிகளும் அதிகளவில் வந்து செல்கின்றன.மேலும், ரோட்டின் குறுக்கே தோட்டத்திற்கு பைப் லைன் எடுப்பதற்காக குழி தோண்டப்பட்டது.இதற்கு, 'பேட்ச் ஒர்க்' செய்யவில்லை. இதனால், ரோடு பல இடங்களில் உருக்குலைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ரோட்டை புதுபிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X