வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் உதவி பொருட்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் உதவி பொருட்கள் வழங்கல்

Added : மே 22, 2020
Share

வேப்பூர்; வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.வேப்பூர் ஊராட்சி சார்பில் கொரோனா உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார். துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், சப் - இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உதவி பொருட்கள் வழங்கினார். வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், மாயவன், தனலட்சுமி, விஜயலட்சுமி, முருகன், பாஞ்சாலை, அய்யம்மாள், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், வேப்பூரைச் சேர்ந்த 150 ஊனமுற்றோர்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட 10 வகை மளிகை பொருட்கள், காய்கறிகள், முக கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X