சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கொரோனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : கொரோனா தாக்கம் அதிகரித்து சிங்கப்பூரில் மேலும் 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் நோய் தொற்று நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இது தொடர்பாக இன்று (மே.,22) சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரில் மேலும் 614 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 30,426 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து தங்கி பணியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் கட்டுமான மற்றும் உணவு விடுதி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள்.


latest tamil news



தொடர்ந்து, நாட்டில் உள்ள ஆரஞ்சு பள்ளத்தாக்கு நர்சிங் ஹோம் பகுதி புதிய கிளஸ்டராக அறிவிக்கப்பட்டது. அதன் குடியிருப்பாளர்களில் 4 பேர் நோய் தொற்றுக்கு பரிசோதிக்கப் பட்டனர். நேற்று ஒரே நாளில் 10,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 250 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன. நாட்டில் நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதுவரை 12,108 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X