நடுவீரப்பட்டில் நிகும்பலாயாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுவீரப்பட்டில் நிகும்பலாயாகம்

Added : மே 22, 2020
Share
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு,

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. கொரோனாவை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X