சென்னை : கொரோனா ஊரடங்கால், கால்நடை துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள, பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற, ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தலைமையில், உயர் மட்ட குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.இக்குழு சார்பில், துறை வாரியாக, துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கால்நடை துறைக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுவில், தமிழ்நாடு கால்நடை பல்கலை பதிவாளர், தென்சிங் ஞானராஜ்.மேலும், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவர், சிங்கராஜ், முட்டை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவர், சுப்ரமணியன், நிர்வாக உறுப்பினர் காளியண்ணன், ருக்மாங்கதன், செல்வகுமார், செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை குழு உறுப்பினர், ஸ்ரீகுமார், கோழி ஏற்றுமதியாளர்கள் சங்க செயலர், வல்சன் பரமேஸ்வரன், கால்நடைத் துறை கூடுதல் இயக்குனர், ஆறுமுக பெருமாள், உதவி இயக்குனர், பிரிசில்லா மாலினி நிக்கேல்சன்.மேலும், மெட்ராஸ் கால்நடை கல்லுாரி, கோழி அறிவியல் துறைத் தலைவர், செல்வன், கால்நடை வர்த்தக மேலாண்மைத் துறை தலைவர், பிரபு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இக்குழு, இன்று சென்னை கால்நடைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கூடி, ஆலோசனை நடத்த உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE