பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணிவதில் மக்கள் அலட்சியம்: நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் 'கெடுபிடி'

Updated : மே 23, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
 முக கவசம்  அணிவதில் மக்கள் அலட்சியம்: நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் 'கெடுபிடி'

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கினால் கடைக்கு சீல் வைக்கபடும் என நகராட்சி கமிஷ்னர் எச்செரிக்கை செய்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 17 வரை தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. கடந்த 17ம் தேதி முதல் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது. இருந்தும் அரசு பல்வேறு தளர்வகளை அறிவித்தது.

இதனால் ஓரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிகளவு வெளியில் சென்று வர துவங்கினர். அரசு முககவசம் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும் என அறிவித்தது. பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டிவந்தனர்.

இதனால் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியில்லாமலும் முககவசம் அணியாமலும் பொருட்கள் வாங்க துவங்கினர்.இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தாமதமாக விழித்துக் கொண்ட நகராட்சி அதிகாரிகள் மறுபடியும் முககவசம் அணிய வலியுறுத்துகின்றனர்.

கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் அணியாமலும் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி கமிஷ்னர் பிரபாகரன் எச்செரிக்கை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X