கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகளுக்கு 4 சதவீத நிதி அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக, 4 சதவீத நிதி ஒதுக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பு மற்றும், 'டிசம்பர் - 3 இயக்கம்' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:ஊரடங்கு நேரத்தில், மாற்று திறனாளிகளுக்கு செலவு அதிகம். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த சலுகைகள், மிகவும் குறைவு. 1,000 ரூபாய் நிதியுதவி, உணவு பொருள் வழங்குவது போதுமானதாக இல்லை.மத்திய, மாநில அரசுகள், கொரோனா நிவாரண நிதி வசூலிக்கின்றன. எவ்வளவு தொகை பெற்றுள்ளனர் என்பது பற்றி, சரியான தகவல் இல்லை. மாற்று திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டக் கூடாது.

அவர்களுக்கு, குறைந்தது, 4 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். ஊரடங்கை எதிர்கொள்ள போதிய ஏற்பாடுகள் இல்லாததால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், சிறு, குறு நிறுவன உரிமையாளர்களின், சமூக பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, மாற்று திறனாளிகளின் நலனுக்காக, 4 சதவீத நிதியை ஒதுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X