பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வு: வாழைத்தார் விலை உயர்வு

Added : மே 22, 2020
Share
Advertisement
 ஊரடங்கு தளர்வு: வாழைத்தார் விலை உயர்வு

ஆனைமலை:ஆனைமலையில் நடந்த வாழைத்தார் ஏலத்தில், வரத்தும், விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர் பகுதி விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.நேற்றைய ஏலத்தில், அதிக அளவிலான விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, கடைகள் திறந்ததால், வாழைத்தாருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், வாழைத்தார் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. வியாபாரிகள் கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதிக அளவிலான கடைகள் செயல்படத்துவங்கி உள்ளன. விவசாயிகளும் சிரமமின்றி வாழைத்தாரை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.பேக்கரிகள் திறக்கப்பட்டதால், 'சிப்ஸ்' தயாரிக்க தேவைப்படும் நேந்திரன் வாழைப்பழத்தின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், நேந்திரன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கதளி ரக வாழைத்தார், 400 ரூபாய்; செவ்வாழை, 1,000; பூவன், 450; நேந்திரன், 400; கற்பூரவல்லி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து ரக வாழைத்தாரும், 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X