பொது செய்தி

தமிழ்நாடு

4 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: வரும், 27ல் துவக்கம்; 640 ஆசிரியர்கள் பங்கேற்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி வரும், 27ம் தேதி துவங்குகிறது. சமூக விலகல் பின்பற்ற வேண்டியுள்ளதால், இந்த முறை நான்கு மையங்களில் திருத்தும் பணி நடக்கிறது.தமிழகத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த, மார்ச் மாதம் நடந்தது. இதனையடுத்து, பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக மாநிலம் முழுவதும் கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பி.கே.டி., பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை.பள்ளி கல்வித்துறை உத்தரவுப்படி, விடைத்தாள் திருத்தும் பணி வரும், 27ம் தேதி துவங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அறையில், ஒரு முதன்மை தேர்வர், ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவித்தேர்வாளர்கள் நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், விடைத்தாள் திருத்தும் மையமான பி.கே.டி., பள்ளி மற்றும் துணை விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களாக, சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவாலிக் பள்ளி, ஆச்சிப்பட்டி பி.வி.என்., பள்ளி என நான்கு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலரும்; துணை முகாம் அலுவலர்களாக பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில், பி.கே.டி., பள்ளியில், 130 ஆசிரியர்கள், சுபாஷ் பள்ளியில், 250; சிவாலிக் பள்ளியில், 130; பி.வி.என்., 130 ஆசிரியர்கள் என மொத்தம், 640 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். பி.கே.டி., பள்ளியில், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், வரலாறு, வேதியியல் பாடங்களும்; சுபாஷ் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல் பாடங்களும் மதிப்பீடு செய்யப்படுகிறது.சிவாலிக் பள்ளியில், பொருளியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல்; பி.வி.என்., பள்ளியில், கணிதம், வணிக கணிதம், வணிகவியல், கணக்குப்பதிவியல் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.முதல் நாளான, 27ம் தேதி, முதன்மை தேர்வர்களும்; 28ம் தேதி முதல், உதவித்தேர்வாளர்களும் திருத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.சமூக விலகல் கட்டாயம்கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகாமில் நுழையும் முன், விடைத்தாள் மதிப்பீடு முடிந்த பின், கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும். சுகாதார பொருட்கள் மற்றும் வாட்டர் பாட்டில்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க வேண்டும். மதிப்பீட்டு மையத்தில் உணவு வசதிகள் ஏற்படுத்தப்பட மாட்டாது. உணவு இடைவேளை மற்றும் கை கழுவும் போது தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X