பெரியகுமட்டியில் அரிசி, காய்கறிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுமட்டியில் அரிசி, காய்கறிகள் வழங்கல்

Added : மே 22, 2020
Share

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி ஊராட்சியில், 685 குடும்பங்களுக்கு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஒன்றிய செயலர் முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். 685 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் காய்கறிகளை, கடலுார்கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தவைர் ராஜாராம், மாவட்ட துணை செயலர் சக்திவேல், முருகேசன், நகர செயலர் முனவர்உசேன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செந்தில்ராஜா, முத்து சந்தீப் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X