கொரோனா நோயாளி உடல் தகனம் கணவருக்காக காத்திருந்த மனைவி அதிர்ச்சி

Added : மே 22, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த தன் கணவனை காணவில்லை என, ஒரு பெண் புகாரளித்துள்ளார்.

ஆனால், அவரது கணவர் உயிரிழந்ததால், உடலை தகனம் செய்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஐதராபாதில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மதுசூதனன், 42, என்பவரைத் தவிர, அவரது மனைவி மற்றும் இரு மகள்களும், மே, 1௬ல், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதற்கிடையே, கடந்த மே, 1ம் தேதி, மதுசூதனன் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை தகனம் செய்துவிட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த அவரது மனைவி, மாதவி, இது குறித்து, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவிடம் முறையிட்டுள்ளார். மாதவி கூறியதாவது: நாங்கள் டிஸ்சார்ஜ் ஆனபோது, என் கணவர் நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம். ஆனால், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. எங்களிடம் இருந்து, எந்த அனுமதியும், அவர்கள் பெறவில்லை.என் கணவரின் சடலத்தை காட்டவில்லை. உடலை தகனம் செய்யும், 'வீடியோ' மற்றும் புகைப்படம் என எந்த ஆதாரத்தையும், காண்பிக்கவில்லை.

என் கணவர் மாயமாகியுள்ளார். இவ்வழக்கை விசாரிக்க, அரசு உத்தரவிடவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ராவ் நேற்று கூறுகையில், ''மதுசூதனன் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், உடல் தகனம் செய்யப்பட்டது. அனைத்தும் முறையாகவே செய்யப்பட்டன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X