பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநிலங்களில் இருந்து 228 பேர் சங்கராபுரம் வருகை

Added : மே 22, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; வெளி மாநிலத்தில் இருந்து சங்கராபுரம் வந்த 228 தொழிலாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவித்த அவர்கள் ரயில் மூலம் சென்னை வந்தனர்.பின்னர் பஸ் மூலம் நேற்று காலை சங்கராபுரம் வந்தவர்களை தாசில்தார் நடராஜன், மண்டல அலுவலர் வாசுதேவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வரவேற்று சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X