பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்டோ ஓட்ட கிடைச்சாச்சு அனுமதி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : ஊரடங்கால், இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த, ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக் ஷாக்கள், சென்னை தவிர பிற மாவட்டங்களில், இன்று முதல் இயங்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில்,அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்தை எளிதாக்கும் என்பதால், தமிழக மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்; பல மாவட்டங்களில், 'உய்ய்ய்ய்ய்....' என,
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu govt, autos, rickshaw, resume services

சென்னை : ஊரடங்கால், இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த, ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக் ஷாக்கள், சென்னை தவிர பிற மாவட்டங்களில், இன்று முதல் இயங்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில்,அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்தை எளிதாக்கும் என்பதால், தமிழக மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்; பல மாவட்டங்களில், 'உய்ய்ய்ய்ய்....' என, விசில் அடிக்காத குறையாக, அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச், 24ல் துவங்கிய ஊரடங்கு, நான்காவது முறையாக, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.அவசரத்துக்கு கூட வெளியில் செல்ல, வாகன வசதி இல்லாததால், மக்கள் திண்டாடினர். சென்னை தவிர பல்வேறு மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், சில பாதுகாப்பு வழிமுறைகளுடன், படிப்படியாக ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுதும், அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு நிபந்தனைகளுடன், மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் முதல், பெட்டிக் கடைகள் வரை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. நிறுவனங்களும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன.அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் வந்து செல்ல, குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மருத்துவமனைக்கு செல்லவும், அவசரமாக பிற இடங்களுக்கு செல்லவும், ஆட்டோக்களை இயக்க, அரசு அனுமதித்தால், உதவியாக இருக்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்டோ டிரைவர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக, ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


ஒரு பயணி மட்டும்இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் எல்லை தவிர, தமிழகத்தின் மற்ற பகுதிகளில், இன்று முதல் ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக் ஷாக்கள் இயங்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இவற்றில், ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும். தினமும் காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை இயக்கலாம்.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக் ஷாக்களை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வசிக்கும் டிரைவர்களும், இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி கிடையாது.பயணியர் பயன்படுத்தும் வகையில், வாகனங்களின் டிரைவர்கள், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். டிரைவர் மற்றும் பயணியர், கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாவை, தினமும் மூன்று முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். டிரைவர்கள் அடிக்கடி, கைகளை சோப்பால் கழுவ வேண்டும்; வாகனத்தில் சுகாதாரம் பேண வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


மக்கள் நிம்மதிபஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக் ஷாக்கள் இயங்க, அரசு அனுமதி அளித்துள்ளது, அவசர போக்குவரத்தை எளிதாக்கும் என்பதால், தமிழக மக்கள் பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.பல மாவட்டங்களில், 'உய்ய்ய்ய்ய்....' என, விசில் அடிக்காத குறையாக, அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைய துவங்கினால், சென்னையிலும் விரைவில் ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாக்கள் ஓடத்துவங்கும் என, எதிர்பார்க்கலாம்.இரண்டு மாதங்களாக வாழ்வாதாரம் முடங்கிக் கிடந்த, ஆட்டோ டிரைவர்களும், ரிக் ஷாக்காரர்களும், 'அப்பாடா... இனி எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்' என்ற நம்பிக்கையில், இன்று முதல் சேவைக்கு தயாராகி விட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
23-மே-202022:45:37 IST Report Abuse
Sundararaman Iyer Only in Tamilnadu you find autos not using the meter. Then why to have the meters? Either you use the meter or get rid of it. There is no such thing as reasonable fare in autos of tamilnadu. It is just loot or rob.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-மே-202011:57:24 IST Report Abuse
தமிழ்வேள் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குள் சுமார் ஐந்து நகராட்சிகள் ,இரண்டு மாநகராட்சிகள் மற்றும் பத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வருகின்றன ..இவற்றுக்கும் ஆட்டோ கிடையாது என்பது அநியாயம் ...சென்னை மாநகர எல்லை என்று வைத்துக்கொள்வது நலம் .....
Rate this:
Cancel
இல. தண்டாயுதபாணி தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X