கள்ளக்குறிச்சி: ரோடுபரமனத்தம் கிராமத்தில் பயன்பாடின்றி கிடந்த கைப்பம்ப் ஆழ்துளை கிணற்றை மறு பயன்பாடு செய்வதற்காக பி.டி.ஓ., ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. இதையொட்டி ரோடுபரமனத்தம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவியதாக எழுந்த புகாரையொட்டி பி.டி.ஓ., (கி.ஊ) ராஜேந்திரன் அக்கிராமத்தில் நேற்று ஆய்வு செய்தார்.அங்கு, பயன்பாடின்றி கிடந்த கை பம்ப் போர்வெல்லில், கயிற்றில் கல்லைக் கட்டி இறக்கி தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என சோதனை செய்தார். தொடர்ந்து மின்மோட்டார் மற்றும் உபகரணங்களை தயார் செய்து, அருகில் உள்ள மினிடேங்கில் இணைப்பு கொடுக்குமாறு ஊராட்சி செயலாளரிடம் அறிவுறுத்தினார்.மேலும், புதிய மினி டேங்க் கட்டுவது குறித்தும் ஆய்வு செய்தார். மண்டல துணை பி.டி.ஓ., செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் முத்து உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE