பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : மே 22, 2020
Share
Advertisement

சுகாதார பணியாளர்கள் போராட்டம்புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், பாதுாப்பு கருதி, அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுவோர் ஆகியோரைத் தவிர, மற்ற சுகாதார பணியாளர்கள், ஓட்டல்களை காலி செய்து விட்டு, வீடுகளில் தங்கலாம். இதையும் மீறி, ஓட்டல்களில் தங்கினால், அதற்கான கட்டணம், சுகாதார பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி உள்ளிட்ட நகரங்களில், சுகாதார பணியாளர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து, நேற்று பணியாற்றினர்.

உ.பி.,யில் விபத்து: தொழிலாளர்கள் பலிலக்னோ: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிலர், ஊரடங்கு காரணமாக வேலையிழந்ததால், தங்கள் சொந்த மாநிலமான பீஹாருக்கு, வாகனம் ஒன்றில் நேற்று திரும்பினர். உத்தர பிரதேச மாநிலம், மிர்சாபூர் அருகே வந்தபோது, அவர்களது வாகனம், எதிரில் வந்த லாரி மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை வழக்கில் துாக்கு தண்டனைலக்னோ: உத்தர பிரதேச மாநிலம், எடாவா மாவட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக, 2012ல், ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம் பிராதப் என்பவருக்கு துாக்கு தண்டனை விதித்து, எடாவா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நில பிரச்னை காரணமாக இந்த கொலைகள் நடந்தன. வெளிநா॑ட்டின் இந்தியர்களுக்கு அனுமதிபுதுடில்லி: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கு, இந்தியாவில் வசிக்க அனுமதி அளிக்கும் வகையில், ஓ.சி.ஐ., எனப்படும் அனுமதிச் சீட்டு, மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஊடரங்கு அமலில் உள்ளதால், விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் மட்டும் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்கள், குடும்பத்தினரை பார்ப்பதற்காக, குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவுக்கு வர அனுமதி அளித்து, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. உளவுத்துறை எச்சரிக்கைபுதுடில்லி: தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால், உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கான கருவியான, 'தெர்மா மீட்டரின்' பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி, சிலர், நம் அண்டை நாடான சீனாவில் இருந்து, தெர்மா மீட்டரை நம் நாட்டிற்குள் பெருமளவு கடத்தி வருவதாக, வருவாய் துறை புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.

இதையடுத்து, நாடு முழுதும் விமான சரக்கு போக்குவரத்தை கண்காணிக்கும்படி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புலனாய்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X