தமிழ்நாடு

தேவை! வண்டல் மண் எடுக்கும் பகுதிகளில் கண்காணிப்பு...வரைமுறையின்றி தோண்டுவதால் விபத்து அபாயம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படாததால் மழைக்காலங்களில் சிறுவர்கள் நீர் நிலைகளில் விழுந்து இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகளின் நலன் கருதி விளை நிலங்களை திருத்துதல் உட்பட பல்வேறு தேவைகளுக்காக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் ஏரி, குளம், அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம்.புதர் மண்டிக் கிடக்கும் நீர் நிலைகளை துார்வாரி, ஆழப்படுத்துதல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். விவசாயிகளின் தேவையும் பூர்த்தியடைவதால், மண் திருட்டு குற்ற சம்பவம் குறையும். விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையினால் நிரம்பிய நீர்நிலைகள் அனைத்தும், தற்போது வறண்டுள்ளன. மண் ஈரப்பதத்துடன் இருப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, அணைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

இதில், மண் எடுப்பதற்கான ஆழத்தின் அளவும், இடமும் வரையறுக்கபடாததால், இந்த திட்டத்தின் பெயரில் தாறுமாறாக நீர்நிலைகள் தோண்டப்பட்டு வருகிறது. அதாவது, நீர்நிலைகளின் கரைப்பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை ஒரே அளவில் மண் தோண்டி எடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும்.ஆனால் மண் எடுப்பவர்கள் தங்களின் தேவைக்கேற்ப மண் எங்கு உள்ளதோ, அங்கு மட்டும் பெரிய அளவிலான பள்ளங்களை தோண்டி எடுக்கின்றனர்.இதனால் நீர்நிலைகள் சமநிலையற்ற அளவை வேகமாக இழந்து வருகிறது. நீர்நிலைகளின் சில இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் புதிதாக உருவாகிறது. மற்ற இடங்கள் பள்ளம் தோண்டப்படாமல் அப்படியே இருப்பதால், மழைக்காலங்களில் பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி குட்டையாக நிற்கிறது.இதனால் தண்ணீர் விவசாயிகளுக்கு பயனின்றி போவதும், மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும் நிலையில், நீர் நிலைகளில் குளிக்கும் சிறுவர்கள் பள்ளத்தில் மூழ்கி இறப்பதும் தொடர்கதையாக உள்ளது.கடந்த ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுபோன்று நீர் நிலைகளில் விழுந்து இறந்துள்ளனர். இதையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் நீர்நிலை பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கக்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் இந்த தவறு தொடர்கதையாக உள்ளது. எனவே, வண்டல் மண் எடுக்கும் நீர்நிலை பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்வதுடன், மண் எடுப்பதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X