காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், நலிந்த நிலையில் உள்ள இயல், இசை, நாடகக் கலைஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, ஆண்டுதோறும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவித்து வரும் கலைப்பணி கலைஞர்களுக்கு, அன்னைத் தமிழ் இலக்கிய மன்றமும், படப்பையில் இயங்கி வரும், தனியார் டிரஸ்ட் நிர்வாகமும் சேர்ந்து, நிவாரணம் வழங்க முடிவு செய்தது.அதன்படி, முதற்கட்டமாக, கடந்த, 16ல், 50 நலிந்த கலைஞர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.இரண்டாவது கட்டமாக, நேற்று முன்தினம், 80 பேருக்கு, அத்தியாவசியப் பொருட்களை, தனியார் டிரஸ்ட் நிறுவன தலைவர், பீனா கில்பட் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE