அரசியல் செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடி துப்பாக்கி சூடு பழியை அரசால் துடைக்க முடியாது: ஸ்டாலின்

Added : மே 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
  துாத்துக்குடி துப்பாக்கி சூடு பழியை அரசால் துடைக்க முடியாது: ஸ்டாலின்

சென்னை : 'துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ பழியை, எத்தனை ஆண்டுகளானாலும், அ.தி.மு.க., அரசால் துடைத்துக் கொள்ள முடியாது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பொதுமக்கள் மீது, அநியாயமாக துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து, நேற்றுடன், இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. துப்பாக்கிச் சூட்டினால் வடிந்த ரத்தம் காய்ந்து விட்டாலும், ஏற்பட்ட கொடுங்காயங்கள் ஆறிவிட்டாலும், அதனால், மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மட்டும் மாறாது; தீராது.இதனால், அ.தி.மு.க., ஆட்சியாளர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக்கறை, ஷேக்ஸ்பியர் சொல்லியிருப்பதைப் போல, கடல் நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும், அ.தி.மு.க., அரசால் துடைத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


வீரவணக்கம் :


தி.மு.க., மகளிரணி செயலர், கனிமொழி, 'டுவிட்டர்' பதிவு:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.கலவரத்தை கட்டுப்படுத்த என்ற, பொய்யை கட்டவிழ்த்து, போராடிய மக்களின் உயிர் குடித்தது, அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைக்கவில்லை.மக்கள் எழுச்சியின் முன், எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை, இந்த அரசுக்கு உணர்த்த, நாம் உறுதியேற்போம். துாத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
23-மே-202020:45:08 IST Report Abuse
RajanRajan அதை தான் .....
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
23-மே-202017:36:29 IST Report Abuse
Baskar நாங்கள் யாவரும் தூத்துக்குடி துப்பாக்கி விஷயத்தை மறக்கவில்லை மறுக்கவும் இல்லை. அதே போல் சதிகபாட்ச தினகராறான் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு லெட்சோபோ லட்சம் இலங்கை மக்களை கொன்று விட்டு இன்று நிம்மதியாக அலைகடல் ஓரம் தூங்குகிறானே ஒருத்தன் அவனையும் உன்னையும் ஏத்த கிருமிநாசினிகள் கழுவினாலும் போகாது என்பதை மறக்காதே.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-மே-202012:32:15 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பெடரொல் குண்டு வீசிய கிரிமினல்களுக்கு திமுக துணையா? அவர்களை சுட்டது சரியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X