சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரை தாக்கியவர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தில் இக்பால் என்பவரின் பீப் பிரியாணி கடையில் சிலர் ரகளையில் ஈடுபடுவதாக திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சோமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு, தேவனுாரைச் சேர்ந்த காசி மகன் அருள்குமார், 33; கடையில் இருந்த பிரியாணி டபரா, அடுப்பு போன்றவற்றை உடைத்து மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபடடது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, போலீசாரை திட்டி தாக்கினார். இதில் போலீஸ்காரர் குருமூர்த்தி கையில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அருள்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X