காஞ்சிபுரம் : மானாவாரி இயக்கக திட்டம் குறித்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோகன் கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மானாவாரி நிலங்களை மேம்படுத்தும் பொருட்டு, 5,000 ஏக்கர் வேர்க்கடலை மற்றம் பயறு வகை பயிர்கள் பயிடுவதற்கு, மானாவாரி இயக்கக திட்டம், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, சிறுகாவேரிபாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், அச்சிறுபாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய ஒன்பது வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.இதில், 250 ஏக்கர் உடைய மானாவாரி நிலங்கள், ஒரு தொகுப்பிற்கு, 1 ஏக்கருக்கு தலா, 500 ரூபாய் வீதம், கோடை உழவு மானியம்; பயிரிவதற்கு சவுகரியமாக உயிர் உரங்களுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
சிறப்பாக செயல்படும் குழுவினருக்கு, 10 லட்சம் ரூபாய் விளைப்பொருட்களை, மதிப்பு கூட்டுவதற்கு இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகளை நாடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE