பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.29.93 கோடியில் ஏரிகள் புனரமைப்பு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Added : மே 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 29.93 கோடி ரூபாய் மதிப்பில் 49 ஏரிகள், அணைக்கட்டு வரத்து வாய்க்கால் துார்வாரும் பணிகளுக்கு அமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு நீர்வள ஆதாரதுறை மூலம், தமிழ்நாடு நிலவள திட்டம் பகுதியின் கீழ் பெண்ணையாறு உப வடிநிலத்தில் 29.93 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம், திருக்கோவிலுார், திருவெண்ணைநல்லுார், கண்டாச்சிபுரம் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய தாலுகாவில் 46 ஏரிகளில் மற்றும் 2 அணைக்கட்டு வாய்கால்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏரிகளில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்ச்சி, வளவனுார் பெரிய ஏரியில் நேற்று நடந்தது. அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.பின்னர் அவர் கூறுகையில், 'மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 46 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.திருக்கோவிலுார், எல்லீஸ் அணைக்கட்டு வரத்து வாய்க்கால்கள் புனரமைக்கப்படுகிறது. இதில், 69.745 மீட்டர் கரை பலப்படுத்ததல், 11 மதகு சீரமைப்பு, 63 மதகு மறுகட்டுமானப் பணி, 38 கலிங்குகள் மறுசீரமைப்பு, 138.455 கி.மீ., துாரத்திற்கு வரத்து வாய்க்கால் துார்வாரும் பணிகள் நடக்கிறது. இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 7882.14 எக்டர் நிலங்கள் பாசன வசதியடையும்' என்றார்.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X