சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் துணை மின் நிலைய வளாகத்தில், மின்சார சட்ட மசோதா 2020ஐ வாபஸ் பெறக்கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மின்சார தொழிலாளர் சம்மேளன திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், மின்சார சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வந்தால், மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களை நியமித்து அவர்கள் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்கு சென்றுவிடும். எனவே புதிய மின்சார சட்ட மசோதாவை கொண்டு வர கூடாது என வலியுறுத்தினர்.கள்ளக்குறிச்சி ஐக்கிய தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட ஓய்வூதியர் சங்க திட்ட செயலாளர் கோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.திருவெண்ணெய்நல்லுார்திருவெண்ணெய்நல்லுாரில் மின்வாரிய தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் சார்பில், திருவெண்ணெய்நல்லுார் மின்வாரிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உதவி மின் பொறியாளர் பாக்கியராஜ், வேதகுரு தலைமை தாங்கினார்.உளுந்துார்பேட்டைஉளுந்துார்பேட்டை துணை மின் நிலையம் வளாகம் முன் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டத்தில், பொறியாளர் சங்கம் எழிலரசன், மின்வாரிய மத்திய அமைப்பு வெங்கடேசன், ஐக்கிய சங்கம் ராமகிருஷ்ணன், தொ.மு.ச., பக்கிரசாமி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மாநில மின்வாரியங்களை பிரிக்க கூடாது. மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X