அரசியல் செய்தி

தமிழ்நாடு

தவணை ஒத்திவைப்புக்கான வட்டி தள்ளுபடி ; ராமதாஸ் வலியுறுத்தல்

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தவணை ஒத்திவைப்புக்கான வட்டி தள்ளுபடி  ; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : 'ஆகஸ்ட் வரையிலான, மூன்று மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட, அனைத்து வகை கடன்களுக்கான மாத தவணை செலுத்துவதை, ஆகஸ்ட் வரை மேலும், மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாத கடன் தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல; அதற்கான வட்டியையும் முழுமையாக தள்ளுபடி செய்வதும் தான்.

எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, மே மாதம் வரையிலான, மூன்று மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள, ஆகஸ்ட் வரையிலான, மூன்று மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி, மார்ச், 31ம் தேதியன்று, எவ்வளவு நிலுவை தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணை தொகையை அதிகரிக்காமல் வசூலிக்கும்படி, வங்கிகளுக்கு, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-மே-202006:34:41 IST Report Abuse
Girija அய்யா பேரில் அஞ்சு கோடி வங்கி கடன் வட்டி தள்ளுபடிக்கு நிதி உதவி எழுதிக்கோ , சார் செக்கா இல்ல சூட்கேஸா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X