சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவரை தாக்கிய தந்தை, மகன் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்; தகராறில் இளம்பெண் மற்றும் வாலிபரை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த தென்குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 32; இவரது மனைவி நதியா, 26; இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பூபாலனின் தந்தை இருசப்பன், 55; தாய் சுசீலா, 50; ஆகியோருக்கு பிடிக்கவில்லை.இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், நதியா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று பூபாலன், இருசப்பன், சுசிலா ஆகியோர் நதியாவை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.இதனால், ஏற்பட்ட தகராறில் நதியாவின் தங்கை நளினி, தம்பி விக்னேஷ் ஆகியோரை பூபாலன் உட்பட மூவரும் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், பூபாலன் உட்பட மூவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பூபாலன், இருசப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X