குவைத்தில் தவித்த பெண்களுக்கு உதவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குவைத்தில் தவித்த பெண்களுக்கு உதவி

Added : மே 22, 2020
Share

சென்னை : குவைத் பொது மன்னிப்பு கூடாரத்தில் தவித்த பெண்களுக்கு, தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி, அவர்கள் தாயகம் திரும்ப, தி.மு.க., மகளிரணி செயலர், கனிமொழி ஏற்பாடு செய்துள்ளார்.

குவைத் பொது மன்னிப்பு கூடாரத்தில், தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக, சில பெண்கள், சமூக வலைதளங்களில், வீடியோ வாயிலாக, கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த வீடியோவை கண்ட, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், உடனே, கனிமொழியிடம் உதவும்படி தெரிவித்தார். இதையடுத்து, குவைத் பன்னாட்டு, தி.மு.க., செயலர், சிதம்பரம் தியாகராஜனை தொடர்பு கொண்டு, பொது மன்னிப்பு கூடாரத்தில, தவிக்கும் பெண்களின் நிலை பற்றி, கனிமொழி கேட்டறிந்தார்.பின், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் மற்றும் குவைத்தில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம், தொலைபேசியில் பேசிய கனிமொழி, குவைத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X