பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பூ மார்க்கெட் துவங்கியது

Added : மே 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்;திண்டிவனத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவால், மூடப்பட்டிருந்த பூ மார்க்கெட், வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில், தற்காலிகமாக நேற்று முதல் துவங்கியது.திண்டிவனத்தில் பூ மார்க்கெட்டிலிருந்து, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் அதிகளவில் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் பல்வேறு வகையான 10 ஆயிரம் கிலோ பூக்கள் விற்பனை ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்து வந்தது.எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பூ மார்க்கெட், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதியிலிருந்து முற்றிலும் முடங்கிப்போனது. இதனால், பூக்களை விற்க முடியாததால் விவசாய நிலங்களிலேயே, பூக்கள் அழுகின.இந்நிலையில், திண்டிவனம் மலர் வியாபாரிகள் சங்கத்தினர், திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள உதயம் நகரில் மலர் வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில், தற்காலிகமாக மலர் அங்காடி செயல்பட கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, தற்காலிக இடத்தில் மலர் அங்காடி வைத்துக்கொள்ள அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து நேற்று முதல் மலர் அங்காடி துவங்கியது. இந்த மார்க்கெட்டிற்கு, திண்டிவனம் பகுதிகள் மற்றும் அவ்வையார் குப்பம், ஒலக்கூர், மானுார், ஈச்சேரி, வடஆலப்பாக்கம், காட்டுசிவிரி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து குண்டுமல்லி, முல்லை, டில்லி கனகாம்பரம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ், செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X