நகராட்சி சந்தை வளாகம் புதுப்பிக்கும் பணி: நிதி ஒதுக்கியும் துவங்காமல் இழுபறி

Added : மே 22, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகராட்சி சந்தை வளாகத்திலுள்ள, ரோடுகள் புதுப்பிக்க நிதி ஒதுக்கியும் பணிகள் இழுபறியாகி வருகிறது.உடுமலை நகராட்சி சந்தை வளாகம், 16.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளைவிக்கும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
சந்தை வளாகத்திற்குள், 34 கமிஷன் கடைகள் மற்றும், 314 நிரந்தர கடைகள் உள்ளன. தினமும், 150 முதல் 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.சரக்கு ஆட்டோ, சரக்கு வேன், லாரி என, 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம், விளைபொருட்கள் வருகிறது. தினசரி காய்கறி வியாபாரமும், திங்கட்கிழமைகளில் சந்தை கூடும் போது, ஆயிரக்கணக்கான கடைகள் அமைக்கப்படுகிறது.சனிக்கிழமைகளில், மாட்டுச்சந்தையும், நாட்டுக்கோழி சந்தையும், திங்கட்கிழமை அதிகாலை, ஆட்டுச்சந்தையும் நடக்கிறது. கால்நடை சந்தைக்கு ஏராளமான மாடு, ஆடுகளும், வியாபாரிகளும் வருகின்றனர். ஆனால், சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.வளாகத்திலுள்ள ரோடுகள், 20 ஆண்டுக்கு முன் போடப்பட்டதோடு, தொடர்ந்து பராமரிக்காததால், முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழை காலங்களில், சேறும், சகதியுமாக மாறி, கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, சந்தை வளாகத்திலுள்ள ரோடுகளை புதுப்பிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின், 14 வது நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீட்டின் கீழ், 902 மீட்டர் நீளமுள்ள அனைத்து ரோடுகளும், 48 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதமாகியும் பணிகள் துவங்காமல் உள்ளன.தற்போது 'கொரோனா' ஊரடங்கு காரணமாக, சந்தை வளாகத்தில் பெரும்பாலான பகுதிகள் பயன்படுத்தாமல் உள்ள நிலையில், பணியை துவக்கி, மழைக்கு முன் பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X