பொது செய்தி

தமிழ்நாடு

கோடைமழையால் மகிழ்ச்சி :அணைக்கு தண்ணீர் திறப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
 கோடைமழையால் மகிழ்ச்சி :அணைக்கு தண்ணீர் திறப்பு

வால்பாறை;வால்பாறையில், கடந்த, 15 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்கிறது. நேற்று வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தும், வீடுகளின் மேற்கூரை காற்றுக்கு பறந்தும் பாதிப்புகள் ஏற்பட்டன.ஜூன் மாதம் பருவமழை துவங்கவுள்ள நிலையில், வால்பாறையில் பெய்யும் கோடை மழையினால், வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 20 கனஅடி தண்ணீர் வீதம், சோலையாறு அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், சோலையாறுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 45.24 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 57 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. வால்பாறை நகரில், 17 மி.மீ., மழையளவு பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X