பொது செய்தி

தமிழ்நாடு

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம்

Added : மே 22, 2020
Share
Advertisement
 அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம்

உடுமலை:வைகாசி அமாவாசை தினமான நேற்று, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி மாதம், அமாவாசை மற்றும் கார்த்திகை தினமான நேற்று, உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, பால், தயிர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் என, 16 திரவியங்களில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் இல்லாமல், சிவாச்சார்யார்கள் மட்டும் பூஜையில் பங்கேற்றனர்.வழக்கமாக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, அமாவாசையன்று பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க, ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். தற்போது ஊரடங்கு தடை காரணமாக, கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.அப்பகுதியில், ஏராளமான குரங்குகள் காணப்படும். தற்போது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வராததால், குரங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X