சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்போன் டவர், கோவிலில் போதையில் அட்டகாசம்: 'குடி'மகன்கள் அத்துமீறல்

Added : மே 22, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:'டாஸ்மாக்' மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், 'குடிமகன்'கள் அட்டகாசம் அரங்கேற துவங்கியுள்ளது.தமிழகத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் திறக்கப்பட்டதும், 'குடிமகன்'கள் போதையில் ரோட்டில் உருளும் காட்சிகள் அரகேற்றியுள்ளன.போதை தலைக்கேறியதில், ஆனைமலை அருகே மனைவியை அடித்து கொலை செய்த கொடூரமும் அரங்கேறியது.
இந்நிலையில், கிணத்துக்கடவு அடுத்துள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 52; கூலி தொழிலாளி. நேற்று முன் தினம், மது போதையில், குமாரபாளையம் வந்தவர், கீழே இறந்து கிடந்த சாரை பாம்பை, பல துண்டுகளாக வெட்டி, பிடாரி அம்மன் கோவில் முன்புறம் உள்ள வேலில் குத்தியுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து, இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்திற்கு சென்று, வேலுசாமியிடம் விசாரணை செய்தார்.அப்போது, குடிபோதையில் கீழே கிடந்த செத்த பாம்பை, கோவில் வேலில் தவறுதலாக குத்திவிட்டேன். இதற்காக கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.பொதுமக்கள் யாரும் புகார் கொடுக்காததால், வழக்கு பதிவு செய்யவில்லை.
இதேபோன்று, பொள்ளாச்சி குள்ளிச்செட்டிபாளையம் பகுதிய சேர்ந்தவர் குமார், 43. கட்டடத்தொழிலாளி.இவர் நேற்று, மதியம் போதையில், கொங்கநாட்டான்புதுார் பிரிவுக்கு வந்தார். மாலை, 3:30 மணிக்கு, அருகில் உள்ள தனியார் 'மொபைல் டவர்' மீது ஏறினார்.இதை கண்டவர்கள், உறவினர்களுக்கும், வடக்கிபாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு, தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் விரைந்து வந்தனர்.குடிபோதையில் இருந்தவரை, சமரசம் செய்து டவரில் இருந்து கீழே இறங்க வைத்தனர். அதன்பின், போதை ஆசாமியை, வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், 'குடிமகன்'கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X