கத்தியை காட்டி பணம் பறிப்பு :போதை ஆசாமிகள் மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி பணம் பறிப்பு :போதை ஆசாமிகள் மூவர் கைது

Added : மே 22, 2020
Share

பொள்ளாச்சி:திருப்பூர் மாவட்டம் உடுக்கம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ், 37, சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி கெடிமேடு அருகே பைக்கில் சென்றார்.அப்போது, 'பல்சர்' பைக்கில் வந்த மூன்று பேர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய் பணம், மொபைல்போன், பாஸ்போர்ட், லைசென்ஸ் அடங்கிய பேக்கை பறித்துக் கொண்டு உடுமலை நோக்கி சென்றனர். இது குறித்து தர்மராஜ், கோமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்.ஐ., மணிமாறன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.அப்போது, அவ்வழியாக, கத்தியை காட்டி பணம் பறித்த மூன்று பேரும் பைக்கில் வேகமாக சென்றதை தர்மராஜ் பார்த்து, போலீசாருக்கு அடையாளம் காண்பித்தார்.பைக்கில் தப்பிய, பொள்ளாச்சி ஜோதிநகர் 'சி' காலனியை சேர்ந்த ஆனந்தகுமார், 26, மாக்கினாம்பட்டி நேருநகரை சேர்ந்த அஜித், 24, ஆகியோரை, சூளேஸ்வரன்பட்டியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், பொள்ளாச்சி பல்லடம் ரோட்டை சேர்ந்த சதாம் உசேன், 23, என்பவரையும் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'மூன்று பேரும் மது மற்றும் கஞ்சா பழக்கம் கொண்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மது குடிக்க பணம் இல்லை என்பதால், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். அவர்களை கைது செய்து, செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X