பொது செய்தி

இந்தியா

கடன் தவணை செலுத்துவது 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கடன் தவணை செலுத்துவது 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

மும்பை :வங்கிகளுக்கு கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் 2000மாவது ஆண்டுக்குப் பின் வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25ல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் சமூக நலனுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தது.அதுபோல நிதிச் சந்தை இடர்பாடுகளை சமாளிக்கவும் வங்கிகளிடம் பணப்புழக்கத்தை அதிகரித்து தாராளமாக கடன் வழங்கவும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அவற்றில் வங்கிகளில் கடன் வாங்கியோர் செலுத்தும் மாதாந்திர தவணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கும் திட்டமும் ஒன்று. அதன்படி மே 31ம் தேதி வரை கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.
அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
* ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான 'ரெப்போ' வட்டி 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் டெபாசிட்டிற்கான வட்டி 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் குறைந்த வட்டியில் தாராளமாக கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
* ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடன் தவணை செலுத்துவதற்கான சலுகைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆக.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தவணையை செலுத்தலாம்.
இது கிராம, நகர, கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

அத்துடன் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றில் கடன் வாங்கியோரும் இத்திட்டத்தில் பயனடையலாம்.நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்துவதற்கான
கால அவகாசமும் ஆக.31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தச் சலுகை காலத்திற்கான வட்டி தனிக் கணக்கின் கீழ் வைக்கப்பட்டு நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வசூலிக்கப்படும்.கொரோனா தாக்கம் காரணமாக பங்கு மற்றும் கடன் பத்திர சந்தைகளில் நிலையற்ற சூழல் காணப்படுகிறது. அதனால் பல நிறுவனங்கள் பங்குகள் கடன் பத்திரங்கள்
ஆகியவற்றை வெளியிட்டு நிதி திரட்ட முடியாத நிலை உள்ளது.இதையொட்டி தகுதியுள்ள மூலதனத்தை கொண்டுள்ள வங்கிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் குழுவுக்கு ஒரு முறை வழங்கப்படும் கடனுக்கான வரம்பு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
ஜூன் 30 வரை இத்திட்டம் அமலில் இருக்கும்.பணவீக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. கொரோனாவால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறினார்.


மாநிலங்களுக்கு கூடுதல் தொகை



மாநிலங்கள் நிதிச் சந்தையில் பெறும் கடனை திரும்பச் செலுத்துவதற்கு உதவ ரிசர்வ் வங்கி சி.எஸ்.எப். என்ற ஒருங்கிணைந்த நிதியத்தை பராமரித்து வருகிறது. இந்நிதியத்தில் இருந்து மாநிலங்கள் பெறும் தொகைக்கான வரம்பை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதனால் மாநிலங்கள் கூடுதலாக
13 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பெற முடியும். இதன்படி நடப்பு 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்கள் நிதிச் சந்தையில் பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மாநிலங்கள் பெறும் கடனுக்கான வரம்பை 60 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன் மூலம் மாநிலங்கள் கூடுதலாக 12ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

* பிப்.6 2020 : சீனாவில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி. பங்கு சந்தை சரிவு குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை
* மார்ச் 3 : சந்தை நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
* மார்ச் 6 : இந்தியா கொரோனாவை சமாளிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
* மார்ச் 16 : உலக சுகாதார அமைப்பு கொரோனாவை கொடும் தொற்று நோய் என அறிவித்த பின் அனைத்து வங்கிகளுக்கும் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள தயாராகுமாறு கடிதம்
* மார்ச் 17: ரிசர்வ் வங்கி 150 அதிகாரிகள் தலைமையில் தனியிடத்தில் வங்கி நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்பாடு
* மார்ச் 27 : 3 மாத கடன் தவணை சலுகை; 'ரெப்போ' வட்டி 0.75 சதவீதம் குறைப்பு; ரூ.1 லட்சம் கோடி பணப்புழக்க திட்டம் அறிவிப்பு
* ஏப்ரல் 3 : வங்கிகளின் அன்றாட நிதிப் பரிவர்த்தனை நேரம் காலை 10:௦௦ - பகல் 2:௦௦ மணியாக குறைப்பு
* ஏப்ரல் 17: வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி 0.25 சதவீதம் குறைப்பு. 'நபார்டு சிட்பி' வங்கிகளுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் நீண்ட கால ரெப்போ கடன் 50,000 கோடி ரூபாய் அறிவிப்பு
* ஏப்ரல் 27 : மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 50,000 கோடி ரூபாய் கடன்

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-மே-202017:35:25 IST Report Abuse
sankar you should have applied after verifying all info . Now you can talk to them to reverse . try to find load from other banks at lower interest (now they will offer) . then either go out of this bank or tell them i will go out . and get ur money back provided if it is legitimate
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-மே-202017:20:02 IST Report Abuse
J.Isaac இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்தால் நன்றாயிருக்கும்
Rate this:
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202016:53:10 IST Report Abuse
SELF இந்த சலுகை தேவையே இல்லை. மக்களை அனாவசியமாக குழப்பாதீர்கள். ஆறுமாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டிய அவசியமில்லை ஆனால் ஆறுமாதங்களுக்கு உண்டான வட்டி சேர்ந்து வட்டிக்கு வட்டி சேர்ந்து மொத்தமாக கட்ட நேரிடும் அதை மக்கள் சிலர் புரிந்து கொள்ளவில்லை. 60 மாதங்களுக்கு உண்டான இஎம்ஐ பிற்பாடு 70 மாதங்களாக ஆக்கப்படும் எனவே இதிலுள்ள சாதக பாதகங்களை சரியாக விளக்க வேண்டும். இஎம்ஐ தள்ளுபடி செய்யப்பட்டது என்று தவறான கோணத்தில் படித்தவர்களே கூறிவருகிறார்கள். இது தள்ளுபடி அல்ல பிற்பாடு சேர்த்துக் கட்ட வேண்டும் அதுவும் ஆறு மாதங்களுக்கு அதிகப்படியான வட்டி வசூல் செய்வார்கள் இதை நினைவில் கொள்ளவும்.ஜ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X