ஜனநாயக பாசாங்கை கைவிட்ட மத்திய அரசு ; சோனியா கடும் தாக்கு

Added : மே 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : ''மத்திய அரசு, ஜனநாயக முறையில் நடப்பதாக பாசாங்கு காட்டியதையும், தற்போது கைவிட்டு விட்டது,'' என, காங்., தலைவர், சோனியா கடுமையாக சாடியுள்ளார்.

அவர், டில்லியில், 22 எதிர்கட்சி தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கொரோனா பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சோனியா பேசியதாவது: மத்திய அரசு, ஜனநாயக பாதையில் நடப்பதாக காட்டி வந்த பாசாங்கை கைவிட்டதுடன், கூட்டாட்சி தத்துவத்தையும் மறந்து விட்டது. அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ள ஒரே மையமாக, பிரதமர் அலுவலகம் மாறியுள்ளது. மத்திய அரசு, கொரோனா குறித்து தெளிவான சிந்தனையின்றி, ஊரடங்கு பிறப்பித்தது. தற்போது, ஊரடங்கை திரும்பப் பெறுவது குறித்தும், அதனிடம் தெளிவான திட்டம் இல்லை.

பிரதமர் மோடி அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டமும், அடுத்த ஐந்து நாட்களுக்கு, நிதியமைச்சர், அது குறித்து கூறியதும், கொடூர நகைச்சுவையாக மாறிப் போனது. புலம் பெயர் தொழிலாளர்கள் படும் துன்பங்களை, மத்திய அரசு கவனிக்க மறந்து விட்டது. 13 கோடி குடும்பங்களுக்கு எவ்வித நிதியுதவியும் வழங்கப்படவில்லை. கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க, பார்லி., கூட்டப்படுமா அல்லது பார்லி., நிலைக்குழுவுக்கு 'சம்மன்' அனுப்பப்படுமா என்பது குறித்த அறிகுறி எதுவும் இல்லை. மத்திய அரசு, தன்னிச்சையாக செயல்படுகிறது. எதிர்கட்சிகளுடன் ஆலோசிக்கவோ அல்லது பார்லி.,யில் விவாதிக்கவோ விரும்பவில்லை.

மத்திய அரசு, சீர்திருத்தம் என்ற பெயரில், தொழிலாளர் சட்டங்களை தளர்த்தியதுடன், பொதுத் துறை நிறுவனங்களை, மகத்தான தள்ளுபடியில் விற்பனை செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரசுக்கு, ஏழைகளிடம் கருணையோ, பரிதாபமோ இல்லை. இந்த அரசின் எதேச்சதிகார போக்கை, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கூட்டத்தில், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுடன், முன்னாள் பிரதமர், தேவ கவுடா, ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
23-மே-202020:42:37 IST Report Abuse
RajanRajan மத்திய அரசில் ஊழல் எங்கேன்னு தேடி தேடி அம்மணி ரொம்ப ஆவேசப்படுறாக. ஜனநாயகம்னா ஊழல்கண்டிப்பா இவிகளுக்கு வேணுமே.
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
23-மே-202009:15:01 IST Report Abuse
Srinivasan Rangarajan காங்கிரஸ் அறுபது ஆண்டு காலத்துக்கு மேல் ஆட்சி செய்து பல கோடி ஏழைகளை உருவாகியுள்ளது. அவர்கள் மேல் இரக்கம் இல்லாமல் இந்த பிஜேபி அரசு அவர்கள் எண்ணிக்கையை குறைக்க பார்க்கிறது. இதுதான் உங்கள் குற்றச்சாட்டா,மேடம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X