குடிமங்கலத்தில் ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிமங்கலத்தில் ஆலோசனை கூட்டம்

Added : மே 22, 2020
Share

உடுமலை:குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், நடந்த கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ., ெஷல்டன், துணைத்தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில், நடப்பாண்டு ஒன்றிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம், ஊராட்சிகளுக்கு தேவைப்படும் பணிகள் குறித்து கருத்துரு கேட்கப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X