பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : வாரத்தில் ஆறு நாட்கள் வேலை என்பதால், பத்திரப்பதிவு அலுவலகங்கள், இன்று முதல் சனிக்கிழமைகளில் செயல்பட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் முடங்கிய அரசு அலுவலகங்கள், படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை, தமிழக அரசு, மே 15ல் பிறப்பித்தது. இதன்படி, அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஆறு நாட்கள் செயல்படும். அதற்கு ஏற்ப பணி சுழற்சி முறை, கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், ஏப்., 20 முதல் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு, இந்த புதிய நடைமுறை பொருந்துமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பாக, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை செயலர் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவு:பத்திரப்பதிவு அலுவலகங்கள் அத்தியாவசிய சேவையாக கருதப்பட்டு, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால், 100 சதவீத பணியாளர்களுடன், வாரத்தில் ஆறு நாட்களும், இந்த அலுவலகங்கள் இயங்கும். இதற்கான உரிய நிர்வாக உத்தரவுகளை, பதிவுத் துறை தலைவர் பிறப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, இன்று முதல் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X