பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் போக்குவரத்து துவங்க ஆயத்தம் :சோதனை ஓட்டத்தால் நம்பிக்கை

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பஸ் போக்குவரத்து துவங்க ஆயத்தம் :சோதனை ஓட்டத்தால் நம்பிக்கை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பணி மனைகளில் இருந்து, பஸ்கள் சோதனை ஒட்டம் செய்யப்படுவதால், விரைவில் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலானதும், கடந்த மார்ச், 24ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அலுவலகங்கள், நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
இந்நிலையில், கடந்த வாரம் முதல், நான்காவது கட்ட ஊரடங்கு அமலானாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டு, செயல்படுகின்றன.ஆனால், பஸ் போக்குவரத்து இன்னும் துவங்கப்படாததால், பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரசு போக்குவரத்து கழக பணி மனைகளில் பராமரிக்கப்படும் பஸ்கள், அவ்வப்போது வெளியில் சோதனை ஓட்டம் கொண்டு செல்லப்படுகின்றன.கடந்த இரண்டு மாதங்களாக, பஸ்களையே கண்ணில் காணாத மக்கள், தற்போது சோதனை ஓட்டத்துக்காக ரோட்டில் வரும் பஸ்களை பார்த்து, விரைவில் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் போக்குவரத்து துவங்கும் தேதி குறித்து அதிகாரபூர்வ உத்தரவு வரவில்லை. ஆனால், ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருவதால், எப்போது வேண்டுமானாலும், உத்தரவு வரலாம். அப்போது, பயணிகளை ஏற்றிக் கொண்டு, வழித்தடத்தில் இயங்கும் அளவுக்கு, பஸ்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், பராமரிப்பு செய்து சோதனை ஓட்டம் நடத்துகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
23-மே-202010:47:48 IST Report Abuse
veeramani தமிழக அரசின் மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், ஊழியர்களின் செம்மையான நேர்த்தியான கடும் உழைப்பினால் கொரோனா மட்டுப்படுபட்டது முதல்வரின் அன்றைய கூற்றுப்படி, கொரோனா மிக சரியானவழியில் தடுக்கப்பட்டது. அம்மாவின் அரசு தமழர்களுக்கு நல்லதொரு பரிசினையும் வாழ்வுதனையும் அளித்துள்ளது.மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பஸ் போக்குவரத்து கட்டாயம் நடைபெற வேண்டும். அரசு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X