பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகள் விற்பனைகணக்கெடுப்பு துவக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : காய்கறிகள், பழங்கள் விற்பனை குறித்த கணக்கெடுப்பில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 50 நாட்களுக்கு மேலாக, காய்கறிகள், பழங்களை, தோட்டக்கலை துறையினர் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக நடமாடும் கடைகள் மட்டுமின்றி, பூங்காக்கள், பண்ணைகள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், விற்பனை நடந்து வருகிறது. சென்னையில், 'ஆன்லைன்' விற்பனையும் செயல்பாட்டில் உள்ளது. சென்னை, மாதவரம் பஸ் நிலையத்தில், பழங்கள் மொத்த விற்பனை நடக்கிறது.

இங்கு விற்பனை செய்வதற்கான பழங்களை, பல்வேறு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர்கள் கொள்முதல் செய்து, அனுப்பி வருகின்றனர். ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், பல மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால், காய்கறிகள், பழங்கள் விற்பனை, பல இடங்களில் குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 50 நாட்களுக்கு மேலாக, விற்பனை செய்த காய்கறிகள், பழங்கள் குறித்த கணக்கெடுப்பை, தோட்டக்கலை துறை துவங்கியுள்ளது. இதன் வாயிலாக கிடைத்த வருவாய், செலவு உள்ளிட்ட விபரங்களும், துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X