பொது செய்தி

தமிழ்நாடு

'கவலைப்படாதே தம்பி..' இளைஞருக்கு உதவிய முதல்வர்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
EPS, CM, TN, Twitter, Edappadi K Palaniswami,Chief Minister, TamilNadu, முதல்வர், பழனிசாமி

சென்னை: வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்த இளைஞருக்கு முதல்வர் பழனிசாமி உதவி செய்துள்ளார். முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து டுவிட்டரில் இளைஞர் ஒருவர் பதிவிட்டதாவது: என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு வைரஸ் அறிகுறி உள்ளது. நெஞ்சு வலியால் கஷ்டப்படுகிறேன். டாக்டரிடம் சென்றால் திட்டி அனுப்புகிறார்கள், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவுங்கள் ஐயா. இல்லையெனில் தற்கொலை தான் முடிவு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


அவருக்கு டுவிட்டரில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 'கவலை வேண்டாம் தம்பி.. அமைச்சர் விஜயபாஸ்ர், பீலா ராஜேஷ் ஐஏஎஸ்., அந்த இளைஞருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டார்.

இதனையடுத்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், முதல்வருக்கு பதில் டுவிட் செய்துள்ளார். அதில், அவரிடம் பேசிவிட்டதாகவும், அவர் கடலூரில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் பதிவிட்டார். இளைஞரின் வேண்டுகோளை ஏற்று, துரித நடவடிக்கை எடுத்த முதல்வரையும், சுகாதார செயலாளரையும், பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
23-மே-202021:09:02 IST Report Abuse
Tamilnesan கட்டு மரம் ஆட்சியில் யாரவது நிதி கொடுக்கிறேன் என்றால் உடனடியாக இது போல செயலில் இறங்குவார்கள். அடுத்த ஆட்சி அதிமுக தான். சந்தேகமில்லை.
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
23-மே-202010:29:57 IST Report Abuse
Covim-20 சுடலைக்கும் அநீதி மய்ய கமலகாசனுக்கும் இந்த மாதிரி செய்திகளெல்லாம் காதில் விழாது.. கண்ணில் படாது.. இப்போது மட்டும் அவர்களுக்கு கண்ணும் காதும் நொள்ளை ஆகிவிடும்...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
23-மே-202011:51:49 IST Report Abuse
madhavan rajanDo not blame stalin like that. He also got news through his scheme Onrinaivom vaa that one person in Dindigul wanted pakoka and within six hours he had arranged for the same through the district secretary. As far as kamal is concerned nobody will ask anything from him because he will start giving big lecture on it and will write letters about that to all the leaders of the world of the his sufferings....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-மே-202010:13:21 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நீண்ட நாட்களுக்கு பின் எளிமையான மனிதரை விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக கிடைத்ததற்கு ஆண்டவருக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X